Tuesday, 17 August 2010
வாழ்க வளமுடன்!
Thursday, 12 August 2010
Friday, 6 August 2010
அருள்தந்தை அவர்களின் அஞ்சல் தலை வெளியீட்டு விழா
Swamiji Special Stamp Release Function Invitation
சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா அழைப்பிதழ்
வரவேற்புரை : அருள்நிதி.எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்.
தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்.
விழாவிற்கு தலைமையேற்று,தொடங்கி வைத்து
விழா மலரைவெளியிட்டு வாழ்த்துக்களும்
ஆசிகளும் வழங்குதல் : மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
வெளியிட்டு சிறப்புரை : மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்கள் ,
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி.
கொள்பவர் : டாக்டர். எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
நிர்வாக அறங்காவலர்,அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்.
Saturday, 29 May 2010
பிறப்பு சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் சென்னையில் பிறந்தவரா?குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் நிச்சயம் தேவைப்படும்.அதற்காக மாநகராட்சி சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி வீட்டிலிருந்தபடியே பிறப்பு சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மனு செய்து முன்பு போல காத்திருக்க வேண்டியதில்லை. தமிழக அரசின் முக்கிய மற்றும் நம்முடைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி! கீழ்காணும் LINK ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தகவலை பெற்றுக் கொள்ளுங்கள் .
www.chennaicorporation.gov.in
Friday, 14 May 2010
நியாயத்திற்கு கிடைத்த வெற்றி! முதல்வருக்கு நன்றி !
ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh ÙNÖ‹RUÖ] ŒXjL¸¥ hz›£ப்ÚTÖ¡Á ‰ÁT†ÛR† ‰ÛP†‰, AYŸLÛ[ TÖ‰LÖ†‡|• YÛL›¥, ÙNVXŸ, BÛQVŸ U¼¿• GÁÛ]யும் LX‹‰ BÚXÖp†‰ 9.11.2007-¥ வழங்கப்பட்ட N¨ÛLLÛ[ ÚU¨• «¡°T|†‡ E†RW° ‘\ப்‘eLXÖ• G] A½°ÛWL· வழங்கியு·[ÖŸL·. CRÁTz, 2007-• ஆண்டு AWNÖÛQ›¥ ŒŸQ›eLTyP “‡V YÖPÛLÛV 2001-• ஆண்டி¦£‹ÚR Œ¨வையு PÁ Ys¦eLTP வேண்டும் GÁ\ E†RW«Û] R[Ÿ° ÙNš‰, ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh ÙNÖ‹RUÖ] ŒXjL¸¥ hz›£‹‰ Y£TYŸL· 2001-• ஆண்டி¦£‹‰ 2007-• ஆண்டு YÛW ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh H¼L]ÚY RÖjL· GÁ] YÖPÛL ÙN¨†‡ Y‹RÖŸLÚ[Ö A‹R TÛZV YÖPÛLÛVÚV ÙN¨†‡]Ö¥ ÚTÖ‰• GÁ¿•, 2007-• ஆண்டு ˜R¥, 9.11.2007 SÖ¸yP AWNÖÛQ›ÁTz ŒŸQ›eLTyP “‡V YÖPÛL›Û] ÙN¨†‡P வேண்டுÙUÁ¿• A½°ÛW YZjf, CÁ¿ C‹R A½விப்‘Û] ÙR¡«eL ˜R¥-AÛUoNŸ E†RW«y| E·[ÖŸ. CRÁ ™X• R–ZL• ˜µY‰• E·[ ÚLÖ«¥ U¼¿• CRW A\Œ¿Y]jLºeh ÙNÖ‹RUÖ] ŒXjL¸¥ hz›£‹‰ Y£• T¥XÖ›WeLQeLÖ] h|•TjL·, AYŸL· G‡ŸTÖŸ†‡£‹R TVÛ] AÛPYÖŸL·.
நான்காண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! நியாயத்திற்கு கிடைத்த வெற்றி!
முதல்வருக்கு நன்றி !
நன்றி- செய்தி :தினத்தந்தி
Monday, 10 May 2010
கடவுளே கோயில்களுக்கு கொடுத்த நிலமல்ல
அறநிலையத்துறை வாடகைதாரருக்கு அனுப்பிய கடிதத்தில் பல லட்சங்கள் பாக்கி என்று மக்கள் மத்தியில் குண்டைத் தூக்கி போட்டது.
எப்படிஎன்றால் சுமார் 60 ரூபாய் வாடகை கட்டுபவருக்கு 4000 ரூபாய் வாடகை நிர்ணயித்து கடந்த ஆண்டுகளுக்கு கணக்கு போட்டு நான்கு லட்சம் ,ஐந்து லட்சம் என வாடகை பாக்கி யாக நிர்ணயித்து குடியிருப்போரை மிரட்டிவருகிறது.
உண்மையிலேயே அறநிலையத்துறை கோயில் மேம்பாட்டில் அக்கறை கொண்டு இதனை செயல் படுத்துகிறதா?இப்படியாக வரும் வசூலிக்கும் பணத்தை அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை கொள்ளையடிக்க போட்ட திட்டமா?
தற்போது கோயில்களில் திருப்பணிகள் செய்வது யார்?
விழாக்கள் நடத்துவது யார்?
அனைத்தும் உபயதாரர்கள்தான்.
அதிலும் குறிப்பாக அடிமனைகுடியிருப்போர்தான் .
அப்படியிருக்கும்போது நியாயமான வாடகை நிர்ணயிக்காமல் கந்துவட்டி கும்பலைபோல் நடந்துகொள்வது ஏன்? நியாயமான விலைக்கு பட்டா கொடுத்தால் கூட கோயில்களுக்கு பலகோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.அதன்முலம் கோயிலுக்கு வேண்டிய பராமரிப்பு வேலைகளைச் செய்யலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் செலவுசெய்து வீடு கட்டியோர்,பழுதுபார்த்தோர் இப்படி ஒரு நிலைமை வருமென்று தெரிந்திருந்தால் அந்தக் காசை புறநகர் பகுதியில் இடம் வாங்கிப் போட்டிருந்தால் தற்போது கோடிக்கணக்கில் மதிப்பாகியிருக்கலாம்.
கோயில் நிலம் தானே,அறுபது நூறு வருடங்கள் இங்கே வாழ்ந்தாயிற்று இனிமேல் எங்கே செல்வது? என்று யோசனை செய்தவர்களுக்கு அரசு கொடுக்கும் தண்டனையா?
தமிழக அரசே! அறநிலையத்துறையை கலைத்துவிடு.நாங்கள் கோயில்களை சிறப்பாக நிர்வாகம் செய்கிறோம்.
கோயில் நிலமென்பது கடவுளே கோயில்களுக்கு கொடுத்த நிலமல்ல.நம்மைபோன்ற மக்கள் வாரிசு இல்லாதோர் கொடுத்த நிலம் தான்.
சொந்த மண்ணில் மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள் !அதன் பிறகு பக்கத்து நாட்டு மக்களை வாழவைக்கலாம்!
Wednesday, 7 April 2010
6000 வது இன்னிசை நிகழ்ச்சி
பெருமக்கள் அனைவரும் "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
Tuesday, 6 April 2010
"நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை
அன்பு வாசகர்களே!தமிழ்நாட்டில் சென்னையில் திருவல்லிக்கேணியில் பிறந்த ஒரு தமிழர் சத்தமில்லாமல் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார் .அதாவது 1975 ல் ஆரம்பித்து இதுவரை 5999 தமிழ் இன்னிசைக் கச்சேரிகளை நடத்தி சாதனை புரிந்துள்ளார்.அவர் யார் தெரியுமா? எம் எஸ் வி- ராமமூர்த்தி முதற்கொண்டு இன்றைய இசை உலகைச் சேர்ந்த அனைவராலும் நவராக்ஸ் ஸ்ரீதர் என அன்புடன் அழைக்கப் பட்டவர்.
இன்னிசைநாயகன் "நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் -இராமமூர்த்தி,பி பி ஸ்ரீநிவாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.அவரின் 6000 வது இன்னிசை நிகழ்ச்சி 8 -04 -2010 அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற உள்ளது.
பெருமக்கள் அனைவரும் விழாவுக்கு தவறாமல் வருகை புரிந்து "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
Saturday, 3 April 2010
Friday, 2 April 2010
நாட்டிற்க்கு சுயநலவாதிகளால் பெரும் ஆபத்து ?
அரசு அதிகாரிகள் தற்போது மிகவும் முயற்சி எடுத்து போலி மற்றும் காலாவதியான மருந்துகளை கைப்பற்றி ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றி உள்ளனர்.இது மிகமிக கடினமான ஒரு வேலை. அரசு அதிகாரிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்தப் பணியை செய்துள்ளனர்.
நாளை
போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வது காசுக்காக எதையும் செய்யும் கூலிப் படையை விட மோசமான ஒரு செயல்.
இந்தச் செயலை செய்தவர்களை என்ன செய்வார்கள் தெரியுமா? கோர்ட்டில் நிறுத்துவார்கள்.கோர்ட் விசாரிக்கும் விசாரித்துக் கொண்டே இருக்கும்.இறுதியில் போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்யும்.
பின்னர் அவர்கள் முன்பைவிட பிரமாதமாக தொழில் செய்வார்கள்.
பொது ஜனம் ஆ வென பார்த்துக்கொண்டே அடுத்த அதிரடி செய்திக்கு ஆவலாய் இருக்க வேண்டியதுதான்.
அரசு அதிகாரிகளும் பாவம் தலையிலடித்துக்கொள்ள வேண்டியது ஒரு சாபக் கேடு.......
Sunday, 28 March 2010
சென்னை மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா

நன்றி!-தினமலர்
என் கருத்து.....
சென்னை மயிலாப்பூரில் அறுபத்து முவர் திருவிழா அன்பின் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவிழா என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி கொள்வது இயற்கை.
திருவிழாவின் முக்கியத்துவம் என்ன?அதனால் மக்களுக்கு என்ன நன்மை?
1.கடவுளின் பெயரால் ஆன்மீக அன்பர்களுக்கு கடவுளை வணங்கும் விழா.
2.அன்றைய தினம் நடைபெறும் விழாவுக்கு வேண்டிய பணிகளை செய்ய,நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு.
3.அங்கு சாலைஓரம் கடைபோட்டு வியாபாரம் செய்யும் சிறிய வியாபாரக் குடும்பங்களுக்கு வாய்ப்பு.
4.திருவிழாவில் பங்கு கொள்ளும் கூட்டத்தைப் பாருங்கள் .ஒரு உண்மை நமக்கு விளங்கும்.அனைவரது முகத்திலும் அன்பு என்ற ஒற்றைச் சொல் வெளிப்படும்.
என பலவகையிலும் திருவிழா மக்களை வாழ வைக்கிறது.
Friday, 26 March 2010
மயிலாப்பூரில் தேர் திருவிழா!

Monday, 15 March 2010
மாநகராட்சி பள்ளிகள் இனி 'சென்னை பள்ளிகள்'
சென்னை, மார்ச் 15: சென்னை மாநகராட்சி பள்ளிகள் இனி 'சென்னை பள்ளிகள்' என அழைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகரட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 2010-11 -ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இத்துறைக்கென வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் 'சென்னை மாநகராட்சி பள்ளி' என்ற பெயர் 'சென்னை தொடக்கப் பள்ளி, சென்னை நடுநிலைப் பள்ளி, சென்னை உயர்நிலைப் பள்ளி, சென்னை மேல்நிலைப் பள்ளி' என பெயர் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிக்கு ரூ. 1 லட்சம்: சென்னை மாநகராட்சியில் உல்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருபக்கம் குழந்தைகள் கல்விபயில அரசின் கண்கவர் திட்டங்கள்.மறுபுறம் அவர்கள் படிப்பதற்கு மரநிழல் கூட இல்லாத நிலை.அரசுக்கு ஏன் இந்த பாரபட்சம் அரசு நினைத்தால் இந்த நிலையை போக்க முடியாதா?ஆறே மாதத்தில் சட்ட சபையை நிர்மாணித்த அரசுக்கு ,நாட்டின் ஆணிவேராக இருக்கக்கூடிய கிராம பள்ளிக் கூடங்களுக்கு ஏன் கட்டடங்கள் கட்டித்தர முடியாது?
(இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.)
Saturday, 13 March 2010
சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மன்மோகன்

புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மன்மோகன்
செய்தி, நன்றி! தினமணி
இந்த மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு கோலாகலமாக இருக்க வேண்டிய விழாவை ,சென்னை மக்களே மகிச்சியாக கூடிய சூழலை உருவாக்காமல் இன்று முழுவதும் சென்னையில் தடையுத்தரவு 144 போன்ற சூழலை உருவாக்கி மக்களை நீண்ட நாட்களுக்கு பிறகு அல்லல்பட வைத்துள்ளது வருத்தப்படவேண்டிய விஷயம்.இன்னும் சற்று விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
Thursday, 11 March 2010
நன்றி!தினமலர் முதல்வர் கருணாநிதி ஒருபக்கம் நான்தான் நினைவாலயாங்களும் சிலைகளும் எழுப்பினேன் என்கிறார்.
அதற்கு பதிலடியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னுடைய ஆட்சிக்காலத்தில்தான் பல சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் நினைவாலயங்களும் சிலைகளும் உருவாக்கினேன் என்கிறார்.
ஆட்சியாளர்களின் கடமைகளில் ஒன்று முனோர்களை போற்றி பாராட்டுவதன் மூலம் தான் நம்முடைய ஆட்சிப் பணிகள் எப்படி இருந்தன ,இருக்கின்றன என்பதற்கு வருங்கால தலைமுறைகள் தெரிந்துகொள்ள உதவும் அடையாளம்.
அப்படி கவனிக்கப் படாத தலைவர்கள் இருட்டடிப்பு செயப்பட்ட தலைவர்கள் என பலர் உண்டு.அவர்கள் செய்த சாதனைகள் பற்றிக் கூறினால் எங்கே அவர்கள் இனம் வளர்ந்துவிடுமோ? என்ற கவலையா?
சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் செய்த சாதனைகள் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.பிரிட்டிஷாரிடமிருந்து நமக்கு வரவேண்டியிருந்த பல கோடி ரூபாய் அன்னிய செலாவனிப் பணத்தை இந்தியாவுக்கு தனது வாதத்திறமையால் பெற்றுத்தந்தார்.தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்த தமிழிசைச் சஙத்தை தோற்றுவித்தார்.ராஜா அண்ணாமலை மன்றம் உருவாகக் காரணமானவர்.கோவையை தொழில் நகரமாக மாற்றியவர்.இன்னும் அவர் செய்த சேவை எண்ணிலடங்காது.அவருக்கு தமிழக அரசு செய்த மரியாதை என்ன? மத்திய அரசு செய்த மரியாதை என்ன?
Tuesday, 9 March 2010
நாட்டிற்க்கு பேராபத்து காத்திருக்கிறது

தினமணியில் (9-03-2010)செவ்வாயன்று வந்த செய்தியை படித்து இரண்டு நிமிடம் ஒதுக்கி நம் சமுதாயத்தின் நலன் கருதி சிந்திப்போம்.ஏற்கனவே நடுத்தர அடித்தட்டு மக்களை பாதிக்கும் வகையில் சில்லறை விற்பனையை அம்பானிகளுக்கும் வெளிநாட்டு பணமுதலைகளுக்கும் ஏலம் விட்டு (சிதம்பரமும் குற்றவாளி) விலைவாசி விஷம் போல ஏறி தினம் தினம் அல்லல்படும் பொதுமக்கள் வேதனை போதாதென்று தற்போது மக்களுடைய உயிரையும் விலைபேசுகிறதா?
கர்சரை படத்தின் மேல் கிளிக் செய்து அதன் பின் படியுங்கள்
Saturday, 6 March 2010
நிவாரணம் வழங்க அரசிடம் பணம் இல்லை : மாயாவதி அறிவிப்பு

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனவும், விபத்து நடைபெற்ற இடத்தை மாயாவதி நேரில் பார்வையிட வரவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.இது குறித்து உத்திர பிரதேச முதல்வர் மாயாவதியிடம் கேட்டதற்கு, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அளவிற்கு அரசிடம் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் பல நூறு கோடி ரூபாய் செலவில் சிலைகள் அமைத்த மாயாவதி தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவரது கட்சியின் 25வது ஆண்டு விழா அடுத்த வாரம் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
எல்லா ஊர் முதல்வர்களுமே அப்படியா?
Thanks:Dinamalar
பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு சார்ந்த இலவசப் பயிற்சிகள்
Friday, 5 March 2010
திருவல்லிக்கேணியில் விடுதி ஏற்படக்காரணம்
டாக்டர் நடேசனார்1916 ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மூத்த
தலைவரான டாக்டர் நடேசனார் அவர்கள்- திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் ``திராவிடர் இல்லம்'' என்று பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஒருவிடுதியைத் துவங்கினார்!
ஏன் தெரியுமா?
தமிழ்நாடு முழுவதுமிருந்து சென்னைக்குப் படிக்க வந்த பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு அப்போது தங்குவதற்கு விடுதிகள் இல்லை; பார்ப்பனர்களே ஓட்டல்களை நடத்தியதால் அவர்கள் அங்கே உணவருந்த அனுமதிக்கப்படவில்லை!
1916 ஆம் ஆண்டு வாக்கில் பார்ப்பனரல்லாதார் நிலைமை இப்படித்தான் இருந்தது
என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
1923-இல் நீதித்துறை முழுவதும் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்ததை
எதிர்த்து- அந்தத் துறைக்கு மான்யமே கொடுக்கக் கூடாது!என்று சட்டசபையில் துணிச்சலாக முழக்கமிட்டவர் டாக்டர் நடேசனார் என்ற
வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?
தாழ்த்தப்பட்ட சகோதரர்களை பறையன்'' என்றே அரசு ரிக்கார்டுகளில்
குறித்து வந்ததை எதிர்த்து ``ஆதிதிராவிடர்''என்றே குறிக்க வேண்டும் என்று
சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, பிறகு அதை
அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சி தலைவரான டாக்டர். சி . நடேசனார் என்பது
உங்களுக்குத் தெரியுமா?
நடேசனாரின் சலியாத உழைப்பால் உருவெடுத்தது என்று வரலாறு உங்களுக்குத்
தெரியுமா?
திருவல்லிக்கேணியில் டாக்டர் நடேசன் சாலை அவரின் சேவையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
நன்றி!--விமலேந்திரா திருஞானசம்பந்தர்
Wednesday, 3 March 2010
சாமி (யார்?)
சாமி(யார்?) நேற்று வரை உச்சி சாமி இன்று கிச்சு சாமி.ஆரம்பத்திலிருந்தே இவர்மீது சந்தேகமுண்டு.இவர் மீது மட்டுமல்ல.மேலும் பலர் இந்த வேடமிட்டு பணத்தையும் ,மேலிட செல்வாக்கையும் பெற்று உலவுகிறார்கள்.
கணவனை வீட்டு வேலை செய்யவிட்டு (ஆ)சாமிக்கு பாத பூஜை செய்துகொண்டு இருப்பார்கள்.
நம்பிக்கை நம்மிடத்தில் வையுங்கள்! நம் குடும்பத்தின் மீது வையுங்கள்.
வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.
இல்லையென்றால்(ஆ)சாமிதான் மகிழ்ச்சியில் இருப்பார்.
Tuesday, 2 March 2010
மாமியாரா? மருமகளா?
மயானச்சூரையின் போது வெளிப்பட்ட குடும்ப (குடுமிச்) சண்டை.உண்மையில் சாமி வந்தது போல் ஆடி மருமகளை இந்தப்பிடி பிடிக்கிறார்
வீடியோ உதவி: D.வசந்தகுமார்






