சென்னை, மார்ச் 15: சென்னை மாநகராட்சி பள்ளிகள் இனி 'சென்னை பள்ளிகள்' என அழைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகரட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 2010-11 -ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இத்துறைக்கென வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் 'சென்னை மாநகராட்சி பள்ளி' என்ற பெயர் 'சென்னை தொடக்கப் பள்ளி, சென்னை நடுநிலைப் பள்ளி, சென்னை உயர்நிலைப் பள்ளி, சென்னை மேல்நிலைப் பள்ளி' என பெயர் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிக்கு ரூ. 1 லட்சம்: சென்னை மாநகராட்சியில் உல்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருபக்கம் குழந்தைகள் கல்விபயில அரசின் கண்கவர் திட்டங்கள்.மறுபுறம் அவர்கள் படிப்பதற்கு மரநிழல் கூட இல்லாத நிலை.அரசுக்கு ஏன் இந்த பாரபட்சம் அரசு நினைத்தால் இந்த நிலையை போக்க முடியாதா?ஆறே மாதத்தில் சட்ட சபையை நிர்மாணித்த அரசுக்கு ,நாட்டின் ஆணிவேராக இருக்கக்கூடிய கிராம பள்ளிக் கூடங்களுக்கு ஏன் கட்டடங்கள் கட்டித்தர முடியாது?
(இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.)
No comments:
Post a Comment