
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பங்குனி விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை விழா நடக்கிறது. 31ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை விடையாற்றி விழா நடக்கிறது.
நேற்று 7ம் நாள் விழா நடந்தது. காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதன்பின், கபாலீஸ்வரர் தேர் சென்றது.
அதை தொடர்ந்து கற்பகாம்பாள், சிங்கார வேலர், சண்டீஸ்வரர் தேர்கள் அணிவகுந்தன. மேளதாளம் முழங்க தேர் பவனி வந்தது. கற்பகாம்பாள் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். தேர் வலம் வரும் பாதையெங்கும் இலவசமாக மோர், எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டன. கிழக்கு மாட வீதியில் தேர் புறப்பட்டு தெற்கு, மேற்கு மாடவீதி வழியாக கிழக்கு மாட வீதியில் மதியம் 12.45 மணிக்கு நிலைக்கு நின்றது. பின்னர், தேரில் இருந்து கபாலீஸ்வரர் கோயிலுக்குள் எழுந்தருளினார். தேரோட்டத்தை காண சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்து. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறுபத்து மூவர் விழா நடக்க இருக்கிறது. இதைக் காண லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள். இரவு ஐந்திருமேனிகள் விழா நடைபெறும்
No comments:
Post a Comment