Saturday, 6 March 2010

பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு சார்ந்த இலவசப் பயிற்சிகள்

நன்றி!-தினமணி

திருச்சி, மார்ச் 5: பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு சார்ந்த இலவச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் நிதியுதவியோடு சிறுபான்மையினர் அல்லாத பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர், மாணவிகளுக்கு இலவச வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.கார்மெண்ட் தயாரிப்பு தொழில்நுட்பம், டெக்ஸ்டைல் வடிவமைப்பு மற்றும் கணினிப் பயன்பாடு, ஷட்டில்லெஸ் விவிங் ஆகிய பயிற்சிகள் ஓராண்டு நடைபெறும். இப்பயிற்சியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆப்தலாமேஜி உதவியாளர் பயற்சி 6 மாதங்கள் நடைபெறும். இப்பயிற்சியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுபோல ஜேசிபி பொக்லைன் போர்க் லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி 3 மாதங்கள் நடைபெறும். இந்தப் பயிற்சியில் சேர எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேற்கண்ட பயிற்சியில் சேர விரும்புவோரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், 2010, ஜனவரி 1 ஆம் தேதியன்று 32 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். பயிற்சிக் கட்டணத் தொகை முழுவதும் அரசால் பயிற்சி நிலையத்துக்கு வழங்கப்படும். இப்பயிற்சிகளில் சேர விரும்புவோர் ஒரு வெள்ளைத் தாளில் சேர விரும்பும் பயிற்சியின் பெயர், மாணவ, மாணவியின் பெயர், தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர், தற்போதைய முகவரி (தொலைபேசி எஎண்ணுடன்), பிறந்த தேதி, வயது, கல்வித் தகுதி, ஜாதி மற்றும் ஆண்டு வருமானம் ஆகிய விவரங்களுடன் பூர்த்தி செய்து, கல்வித் தகுதிச் சான்றிதழ் நகல், கல்வி நிலைய மாற்றுச் சான்றிதழ், ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ் நகல்கள் மற்றும் ரூ. 5 க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய முகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு மார்ச் 8 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பப் படிவங்களை அனுப்பி, பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment