கோயில் நிலங்களில் குடியிருந்து வருவோரில் 99 % சதவீதம் பேர் ஏறக்குறைய மூன்று நான்கு தலைமுறையாக வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் அரசு தன்னிச்சையாக ஒரு சட்டத்தை இயற்றியது.அதனை நடைமுறைபடுத்தவில்லை.அதன் பின் வந்த அதி மு க அரசும் அதனை கண்டுகொள்ளவில்லை .திரும்பவும் பொறுப்பேற்ற திமுக அரசு வந்த உடனேயே அந்த சட்டத்தை நடைமுறைபடுத்த துவங்கியது.
அறநிலையத்துறை வாடகைதாரருக்கு அனுப்பிய கடிதத்தில் பல லட்சங்கள் பாக்கி என்று மக்கள் மத்தியில் குண்டைத் தூக்கி போட்டது.
எப்படிஎன்றால் சுமார் 60 ரூபாய் வாடகை கட்டுபவருக்கு 4000 ரூபாய் வாடகை நிர்ணயித்து கடந்த ஆண்டுகளுக்கு கணக்கு போட்டு நான்கு லட்சம் ,ஐந்து லட்சம் என வாடகை பாக்கி யாக நிர்ணயித்து குடியிருப்போரை மிரட்டிவருகிறது.
உண்மையிலேயே அறநிலையத்துறை கோயில் மேம்பாட்டில் அக்கறை கொண்டு இதனை செயல் படுத்துகிறதா?இப்படியாக வரும் வசூலிக்கும் பணத்தை அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை கொள்ளையடிக்க போட்ட திட்டமா?
தற்போது கோயில்களில் திருப்பணிகள் செய்வது யார்?
விழாக்கள் நடத்துவது யார்?
அனைத்தும் உபயதாரர்கள்தான்.
அதிலும் குறிப்பாக அடிமனைகுடியிருப்போர்தான் .
அப்படியிருக்கும்போது நியாயமான வாடகை நிர்ணயிக்காமல் கந்துவட்டி கும்பலைபோல் நடந்துகொள்வது ஏன்? நியாயமான விலைக்கு பட்டா கொடுத்தால் கூட கோயில்களுக்கு பலகோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.அதன்முலம் கோயிலுக்கு வேண்டிய பராமரிப்பு வேலைகளைச் செய்யலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் செலவுசெய்து வீடு கட்டியோர்,பழுதுபார்த்தோர் இப்படி ஒரு நிலைமை வருமென்று தெரிந்திருந்தால் அந்தக் காசை புறநகர் பகுதியில் இடம் வாங்கிப் போட்டிருந்தால் தற்போது கோடிக்கணக்கில் மதிப்பாகியிருக்கலாம்.
கோயில் நிலம் தானே,அறுபது நூறு வருடங்கள் இங்கே வாழ்ந்தாயிற்று இனிமேல் எங்கே செல்வது? என்று யோசனை செய்தவர்களுக்கு அரசு கொடுக்கும் தண்டனையா?
தமிழக அரசே! அறநிலையத்துறையை கலைத்துவிடு.நாங்கள் கோயில்களை சிறப்பாக நிர்வாகம் செய்கிறோம்.
கோயில் நிலமென்பது கடவுளே கோயில்களுக்கு கொடுத்த நிலமல்ல.நம்மைபோன்ற மக்கள் வாரிசு இல்லாதோர் கொடுத்த நிலம் தான்.
சொந்த மண்ணில் மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள் !அதன் பிறகு பக்கத்து நாட்டு மக்களை வாழவைக்கலாம்!
No comments:
Post a Comment