Tuesday, 6 April 2010
"நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை
அன்பு வாசகர்களே!தமிழ்நாட்டில் சென்னையில் திருவல்லிக்கேணியில் பிறந்த ஒரு தமிழர் சத்தமில்லாமல் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார் .அதாவது 1975 ல் ஆரம்பித்து இதுவரை 5999 தமிழ் இன்னிசைக் கச்சேரிகளை நடத்தி சாதனை புரிந்துள்ளார்.அவர் யார் தெரியுமா? எம் எஸ் வி- ராமமூர்த்தி முதற்கொண்டு இன்றைய இசை உலகைச் சேர்ந்த அனைவராலும் நவராக்ஸ் ஸ்ரீதர் என அன்புடன் அழைக்கப் பட்டவர்.
இன்னிசைநாயகன் "நவராக்ஸ்" ஸ்ரீதர் அவர்களின் 5999 வது இன்னிசை நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் -இராமமூர்த்தி,பி பி ஸ்ரீநிவாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.அவரின் 6000 வது இன்னிசை நிகழ்ச்சி 8 -04 -2010 அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற உள்ளது.
பெருமக்கள் அனைவரும் விழாவுக்கு தவறாமல் வருகை புரிந்து "சாதனை நாயகனை" வாழ்த்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment