Sunday, 28 March 2010

சென்னை மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா


நன்றி!-தினமலர்
என் கருத்து.....
சென்னை மயிலாப்பூரில் அறுபத்து முவர் திருவிழா அன்பின் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவிழா என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி கொள்வது இயற்கை.
 திருவிழாவின் முக்கியத்துவம் என்ன?அதனால் மக்களுக்கு என்ன நன்மை?
 1.கடவுளின் பெயரால் ஆன்மீக அன்பர்களுக்கு கடவுளை வணங்கும் விழா.
 2.அன்றைய தினம் நடைபெறும் விழாவுக்கு வேண்டிய பணிகளை செய்ய,நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு.
3.அங்கு சாலைஓரம் கடைபோட்டு வியாபாரம் செய்யும் சிறிய வியாபாரக் குடும்பங்களுக்கு வாய்ப்பு.
4.திருவிழாவில் பங்கு கொள்ளும் கூட்டத்தைப் பாருங்கள் .ஒரு உண்மை நமக்கு விளங்கும்.அனைவரது முகத்திலும் அன்பு என்ற ஒற்றைச் சொல் வெளிப்படும்.
    என பலவகையிலும் திருவிழா மக்களை வாழ வைக்கிறது.

Friday, 26 March 2010

மயிலாப்பூரில் தேர் திருவிழா!


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பங்குனி விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை விழா நடக்கிறது. 31ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை விடையாற்றி விழா நடக்கிறது.
நேற்று 7ம் நாள் விழா நடந்தது. காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதன்பின், கபாலீஸ்வரர் தேர் சென்றது.
அதை தொடர்ந்து கற்பகாம்பாள், சிங்கார வேலர், சண்டீஸ்வரர் தேர்கள் அணிவகுந்தன. மேளதாளம் முழங்க தேர் பவனி வந்தது. கற்பகாம்பாள் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். தேர் வலம் வரும் பாதையெங்கும் இலவசமாக மோர், எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டன. கிழக்கு மாட வீதியில் தேர் புறப்பட்டு தெற்கு, மேற்கு மாடவீதி வழியாக கிழக்கு மாட வீதியில் மதியம் 12.45 மணிக்கு நிலைக்கு நின்றது. பின்னர், தேரில் இருந்து கபாலீஸ்வரர் கோயிலுக்குள் எழுந்தருளினார். தேரோட்டத்தை காண சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்து. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறுபத்து மூவர் விழா நடக்க இருக்கிறது. இதைக் காண லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள். இரவு ஐந்திருமேனிகள் விழா நடைபெறும்

Monday, 15 March 2010

மாநகராட்சி பள்ளிகள் இனி 'சென்னை பள்ளிகள்'

சென்னை, மார்ச் 15: சென்னை மாநகராட்சி பள்ளிகள் இனி 'சென்னை பள்ளிகள்' என அழைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகரட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 2010-11 -ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இத்துறைக்கென வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் 'சென்னை மாநகராட்சி பள்ளி' என்ற பெயர் 'சென்னை தொடக்கப் பள்ளி, சென்னை நடுநிலைப் பள்ளி, சென்னை உயர்நிலைப் பள்ளி, சென்னை மேல்நிலைப் பள்ளி' என பெயர் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிக்கு ரூ. 1 லட்சம்: சென்னை மாநகராட்சியில் உல்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.




ஒருபக்கம் குழந்தைகள் கல்விபயில அரசின் கண்கவர் திட்டங்கள்.மறுபுறம் அவர்கள் படிப்பதற்கு மரநிழல் கூட இல்லாத நிலை.அரசுக்கு ஏன் இந்த பாரபட்சம் அரசு நினைத்தால் இந்த நிலையை போக்க முடியாதா?
ஆறே மாதத்தில் சட்ட சபையை நிர்மாணித்த அரசுக்கு ,நாட்டின் ஆணிவேராக இருக்கக்கூடிய கிராம பள்ளிக் கூடங்களுக்கு ஏன் கட்டடங்கள் கட்டித்தர முடியாது?
(இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.)

Saturday, 13 March 2010

சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மன்மோகன்


புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மன்மோகன்
புகைப்படம் ,நன்றி :தினமலர்


சென்னை, மார்ச் 13- தமிழக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டடத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் ரோசைய்யா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மாலை 5 மணியளவில் அவர் ரிப்பனை கத்தரித்து கட்டடத்தை பிரதமர் திறந்துவைத்தார். பின்னர், முதல்வர் கருணாநிதி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் பேட்டரி கார் மூலம் கட்டடத்தை சுற்றிப் பார்த்தனர்.சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் வரவேற்றுப் பேசினார்.முதல்வர் கருணாநிதி விழா தலைமையுரை நிகழ்த்திய பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினார். முடிவில், தலைமைச் செயலர் திரிபாதி நன்றி கூறினார்.
செய்தி, நன்றி! தினமணி

இந்த மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு கோலாகலமாக இருக்க வேண்டிய விழாவை ,சென்னை மக்களே மகிச்சியாக கூடிய சூழலை உருவாக்காமல் இன்று முழுவதும் சென்னையில் தடையுத்தரவு 144 போன்ற சூழலை உருவாக்கி மக்களை நீண்ட நாட்களுக்கு பிறகு அல்லல்பட வைத்துள்ளது வருத்தப்படவேண்டிய விஷயம்.இன்னும் சற்று விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

Thursday, 11 March 2010

நன்றி!தினமலர்
முதல்வர் கருணாநிதி ஒருபக்கம் நான்தான் நினைவாலயாங்களும் சிலைகளும் எழுப்பினேன் என்கிறார்.
அதற்கு பதிலடியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னுடைய ஆட்சிக்காலத்தில்தான் பல சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் நினைவாலயங்களும் சிலைகளும் உருவாக்கினேன் என்கிறார்.
ஆட்சியாளர்களின் கடமைகளில் ஒன்று முனோர்களை போற்றி பாராட்டுவதன் மூலம் தான் நம்முடைய ஆட்சிப் பணிகள் எப்படி இருந்தன ,இருக்கின்றன என்பதற்கு வருங்கால தலைமுறைகள் தெரிந்துகொள்ள உதவும் அடையாளம்.
அப்படி கவனிக்கப் படாத தலைவர்கள் இருட்டடிப்பு செயப்பட்ட தலைவர்கள் என பலர் உண்டு.அவர்கள் செய்த சாதனைகள் பற்றிக் கூறினால் எங்கே அவர்கள் இனம் வளர்ந்துவிடுமோ? என்ற கவலையா?

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் செய்த சாதனைகள் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.பிரிட்டிஷாரிடமிருந்து நமக்கு வரவேண்டியிருந்த பல கோடி ரூபாய் அன்னிய செலாவனிப் பணத்தை இந்தியாவுக்கு தனது வாதத்திறமையால் பெற்றுத்தந்தார்.தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்த தமிழிசைச் சஙத்தை தோற்றுவித்தார்.ராஜா அண்ணாமலை மன்றம் உருவாகக் காரணமானவர்.கோவையை தொழில் நகரமாக மாற்றியவர்.இன்னும் அவர் செய்த சேவை எண்ணிலடங்காது.அவருக்கு தமிழக அரசு செய்த மரியாதை என்ன? மத்திய அரசு செய்த மரியாதை என்ன?

Tuesday, 9 March 2010

நாட்டிற்க்கு பேராபத்து காத்திருக்கிறது


தினமணியில் (9-03-2010)செவ்வாயன்று வந்த செய்தியை படித்து இரண்டு நிமிடம் ஒதுக்கி நம் சமுதாயத்தின் நலன் கருதி சிந்திப்போம்.ஏற்கனவே நடுத்தர அடித்தட்டு மக்களை பாதிக்கும் வகையில் சில்லறை விற்பனையை அம்பானிகளுக்கும் வெளிநாட்டு பணமுதலைகளுக்கும் ஏலம் விட்டு (சிதம்பரமும் குற்றவாளி) விலைவாசி விஷம் போல ஏறி தினம் தினம் அல்லல்படும் பொதுமக்கள் வேதனை போதாதென்று தற்போது மக்களுடைய உயிரையும் விலைபேசுகிறதா?
கர்சரை படத்தின் மேல் கிளிக் செய்து அதன் பின் படியுங்கள்

Saturday, 6 March 2010

நிவாரணம் வழங்க அரசிடம் பணம் இல்லை : மாயாவதி அறிவிப்பு


லக்னோ : உத்திர பிரதேச மாநிலம் பிரதாப்கர் ஆசிரமத்தில் பணம் மற்றும் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 70 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்து போலீஸ் கண்காணிப்பு பகுதிக்கு அருகில் நடந்துள்ளது. சுமார் 15 ஆயிரம் மக்கள் கூடிய இந்நிகழ்ச்சியில், கூட்டத்தை கட்டுப்படுத்த எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாமல் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனவும், விபத்து நடைபெற்ற இடத்தை மாயாவதி நேரில் பார்வையிட வரவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.இது குறித்து உத்திர பிரதேச முதல்வர் மாயாவதியிடம் கேட்டதற்கு, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அளவிற்கு அரசிடம் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் பல நூறு கோடி ரூபாய் செலவில் சிலைகள் அமைத்த மாயாவதி தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவரது கட்சியின் 25வது ஆண்டு விழா அடுத்த வாரம் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

எல்லா ஊர் முதல்வர்களுமே அப்படியா?


Thanks:Dinamalar

பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு சார்ந்த இலவசப் பயிற்சிகள்

நன்றி!-தினமணி

திருச்சி, மார்ச் 5: பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு சார்ந்த இலவச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் நிதியுதவியோடு சிறுபான்மையினர் அல்லாத பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர், மாணவிகளுக்கு இலவச வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.கார்மெண்ட் தயாரிப்பு தொழில்நுட்பம், டெக்ஸ்டைல் வடிவமைப்பு மற்றும் கணினிப் பயன்பாடு, ஷட்டில்லெஸ் விவிங் ஆகிய பயிற்சிகள் ஓராண்டு நடைபெறும். இப்பயிற்சியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆப்தலாமேஜி உதவியாளர் பயற்சி 6 மாதங்கள் நடைபெறும். இப்பயிற்சியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுபோல ஜேசிபி பொக்லைன் போர்க் லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி 3 மாதங்கள் நடைபெறும். இந்தப் பயிற்சியில் சேர எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேற்கண்ட பயிற்சியில் சேர விரும்புவோரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், 2010, ஜனவரி 1 ஆம் தேதியன்று 32 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். பயிற்சிக் கட்டணத் தொகை முழுவதும் அரசால் பயிற்சி நிலையத்துக்கு வழங்கப்படும். இப்பயிற்சிகளில் சேர விரும்புவோர் ஒரு வெள்ளைத் தாளில் சேர விரும்பும் பயிற்சியின் பெயர், மாணவ, மாணவியின் பெயர், தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர், தற்போதைய முகவரி (தொலைபேசி எஎண்ணுடன்), பிறந்த தேதி, வயது, கல்வித் தகுதி, ஜாதி மற்றும் ஆண்டு வருமானம் ஆகிய விவரங்களுடன் பூர்த்தி செய்து, கல்வித் தகுதிச் சான்றிதழ் நகல், கல்வி நிலைய மாற்றுச் சான்றிதழ், ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ் நகல்கள் மற்றும் ரூ. 5 க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய முகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு மார்ச் 8 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பப் படிவங்களை அனுப்பி, பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என்றார் அவர்.

Friday, 5 March 2010

திருவல்லிக்கேணியில் விடுதி ஏற்படக்காரணம்

டாக்டர் நடேசனார்

1916 ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மூத்த
தலைவரான டாக்டர் நடேசனார் அவர்கள்- திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் ``திராவிடர் இல்லம்'' என்று பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஒருவிடுதியைத் துவங்கினார்!

ஏன் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதுமிருந்து சென்னைக்குப் படிக்க வந்த பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு அப்போது தங்குவதற்கு விடுதிகள் இல்லை; பார்ப்பனர்களே ஓட்டல்களை நடத்தியதால் அவர்கள் அங்கே உணவருந்த அனுமதிக்கப்படவில்லை!

1916 ஆம் ஆண்டு வாக்கில் பார்ப்பனரல்லாதார் நிலைமை இப்படித்தான் இருந்தது
என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

1923-இல் நீதித்துறை முழுவதும் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்ததை
எதிர்த்து- அந்தத் துறைக்கு மான்யமே கொடுக்கக் கூடாது!என்று சட்டசபையில் துணிச்சலாக முழக்கமிட்டவர் டாக்டர் நடேசனார் என்ற
வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?

தாழ்த்தப்பட்ட சகோதரர்களை பறையன்'' என்றே அரசு ரிக்கார்டுகளில்
குறித்து வந்ததை எதிர்த்து ``ஆதிதிராவிடர்''என்றே குறிக்க வேண்டும் என்று
சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, பிறகு அதை
அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சி தலைவரான டாக்டர். சி . நடேசனார் என்பது
உங்களுக்குத் தெரியுமா?

இன்று பதவிநியமனங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ``பப்ளிக் சர்வீஸ் கமிஷன்'' பார்ப்பனர்களின் எதிர்ப்பை மீறி நீதிக்கட்சித் தலைவர் டாக்டர்
நடேசனாரின் சலியாத உழைப்பால் உருவெடுத்தது என்று வரலாறு உங்களுக்குத்
தெரியுமா?
திருவல்லிக்கேணியில் டாக்டர் நடேசன் சாலை அவரின் சேவையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
நன்றி!--விமலேந்திரா திருஞானசம்பந்தர்



Wednesday, 3 March 2010

சாமி (யார்?)

சாமி(யார்?) நேற்று வரை உச்சி சாமி இன்று கிச்சு சாமி.
ஆரம்பத்திலிருந்தே இவர்மீது சந்தேகமுண்டு.இவர் மீது மட்டுமல்ல.மேலும் பலர் இந்த வேடமிட்டு பணத்தையும் ,மேலிட செல்வாக்கையும் பெற்று உலவுகிறார்கள்.
கணவனை வீட்டு வேலை செய்யவிட்டு ()சாமிக்கு பாத பூஜை செய்துகொண்டு இருப்பார்கள்.
நம்பிக்கை நம்மிடத்தில் வையுங்கள்! நம் குடும்பத்தின் மீது வையுங்கள்.
வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.
இல்லையென்றால்()சாமிதான் மகிழ்ச்சியில் இருப்பார்.

Tuesday, 2 March 2010

மாமியாரா? மருமகளா?

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ளது அங்காளபரமேஸ்வரிஅம்மன் கோயில் .அங்கு நடைபெற்ற சிவராத்திரி மயானச் சூறை என்ற மாபெரும் வீதிஉலாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.அப்போது அங்கு நடைபெறும் உடுக்கை ஒலி சப்தத்தில் பலருக்கும் சாமி வந்தது என்று சொல்வார்களே அதுபோல் வந்தது. உண்மையில் சாமி வந்தவர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுத்து பார்த்ததில்லை.இந்தவருடம் நடைபெற்ற விழாவில் ஒருவருக்கு சாமிவந்ததை பாருங்கள்.
மயானச்சூரையின் போது வெளிப்பட்ட குடும்ப (குடுமிச்) சண்டை.உண்மையில் சாமி வந்தது போல் ஆடி மருமகளை இந்தப்பிடி பிடிக்கிறார்


வீடியோ உதவி: D.வசந்தகுமார்