திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குட்பட்ட 116 வது வார்டில் நாளை(6-11-2011) காலை 10-30 மணிக்கு பாரதியார் இல்லத்தில் வார்டு கவுன்சிலர் மற்றும் மின்வாரியம்,மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும்"அதிகாரிகளுடன் நேருக்கு நேர்" என்னும் பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அங்குள்ள பொதுமக்கள் யாவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு வா.மைத்ரேயன் ,கவுன்சிலர் திரு.B.சீனிவாசன்(MGR வாசன்)மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதே போன்று மற்ற வார்டுகளிலும் கவுன்சிலர்கள் செயயல்பட்டு பொதுமக்களுடன் இணைந்தால் மேயர் அவர்கள் சென்னை மாநகர வளர்ச்சிக்கு அவருடைய நேரத்தை செலவிட முடியும்.