Wednesday, 11 May 2011

கருத்துக் கணிப்பு


 அன்புள்ள வாசகர்களே! பல மாதங்களாக பல்வேறு பனியின் காரணமாக  பதிவிட முடியாது இருந்தேன். தற்போது தேர்தல் முடிவு வரவிருப்பதை முன்னிட்டு தினமலரில் ஏப்ரல் 21 அன்று வெளியான செய்தியையும் அதன் கீழ் ஒரு வாசகனின் கருதுத்துரையையும் இணைத்துள்ளேன்.படித்து தேர்தல் முடிவு கருத்துடன் சரியாக இருந்தால் பாராட்டுங்கள் .
   

///தேர்தல் முடிவு கணிப்பு அலாதி: மக்கள் மனசை அறிவதில் போட்டா போட்டி

ஏப்ரல் 21,2011  IST
election 2011 தேர்தல் முடிவு கணிப்பு அலாதி: மக்கள் மனசை அறிவதில் போட்டா போட்டி


A+  A-
ஒவ்வொரு தேர்தலிலும், மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக நிலவரங்களை அலசி ஆராய்ந்து, வெற்றி, தோல்வி குறித்த விவரங்களை நாளிதழ்களும், வார இதழ்களும் வெளியிடுகின்றன. இது, ஓரளவு சரியாகவும், தவறாகவும் அமைந்தாலும் சர்வே முடிவுகளை தெரிந்து கொள்ள, கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் மிகவும் ஆர்வமாக இருப்பர். இந்த சட்டசபை தேர்தலிலும், ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட வார இதழ்கள், தேர்தல் முடிவு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளன. சென்னை லயோலா கல்லூரியும், ஒவ்வொரு முறையும் தேர்தல் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.///   -----தினமலர் செய்தி 

வாசகர் கருத்து-
    இவர்கள் அனைவரின் கருத்துக்கணிப்பையும் மீறி தமிழக தேர்தல் முடிவு அமையப்போகிறது. அனால் ஒன்றை அனைவரும் மறந்து இருக்கிறோம் . அதைப்பற்றியே யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது ஏன்  என்று எனக்குப் புரியவில்லை.
 அனைத்து தேர்தல்களிலும் ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி உண்டு.அதன் அடிப்படையில் நான் கணித்து வைத்தபடி அதிமுக அணி  198    இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது. இதில் ஐந்து சதம் மட்டுமே மாற வாய்ப்புள்ளது. இந்த  கணிப்பு சரியாக அமைந்தால் தேர்தல் முடிவன்று என்னுடைய கணிப்பை வெளியிட வேண்டுகிறேன்.நன்றி---பி.தர்மலிங்கம் .சென்னை